பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூலை, 2014

லா..லா..லா பாடலுடன் அரங்கத்தை கலக்க தயாராகும் ஷகீரா 
 உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதி விழாவில் பிரபல கொலம்பியன் பொப் பாடகி ஷகீரா தனது பாடலை பாடவுள்ளார்.

 
இந்த உலகக்கிண்ண தொடரின் தொடக்க விழாவில் லோபஸ் பாடிய பாடல் அந்த அளவு பிரபலம் அடையவில்லை.
 
ஆனால் கடந்த உலகக்கிண்ணப் போட்டியில் இவர் பாடிய 'வக்கா வக்கா' பாடல் பட்டிதொட்டி எல்லாம் பட்டயை கிளப்பியது.
 
இந்நிலையில் தான் தயார் நிலையில் வைத்திருக்கும் 'லா..லா..லா' பாடலை இறுதிப் போட்டியில் பாட தயாராகி 
விட்டார் ஷகீரா.
 
இது பற்றி அவர் கூறுகையில் நான் கால்பந்தாட்டங்களுடன் உள்ள சிக்கலான தொடர்ப்பை வெளிப்படையான 
காரணங்களால் ஏற்றுக்கொண்டேன்.
 
அதே போல் உலகக்கிண்ணம் உலக மக்களுக்கு எந்த வகையில் இருக்கிறது என்பதை நான் உண்மையாக அறிந்து
 கொண்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.