பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2014



தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி எம்.எல்.ஏ.க்களை வியாழக்கிழமை சந்தித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளும் இருந்தனர். 

நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூடடத் தொடரில், கட்சி எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இந்த சந்திப்பில், ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்தும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் தேதி தேமுதிகவின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்று திரும்பியதும், விஜயகாந்த் எந்த மீடியாக்களிலும் வரவில்லை. தற்போது மேற்கண்ட சந்திப்பு நிகழ்ச்சியை அவரது கட்சியின் தொலைக்காட்சி வெளியிட்டது.