பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2014

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மன்னாரில் மட்டும் இதுவரை  157 புதிய முறைப்பாடுகள்
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மன்னாரில் கடந்த நான்கு நாட்களாக நடத்திய அமர்வுகளின் போது 150 எழுத்து மூல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ஆணைக்குழுவின் செயலாளர் எச் டபிள்யூ குணதாஸ இது தொடர்பில் தகவல் தருகையில்,  தமது ஆணைக்குழுவுக்கு நான்கு நாட்களிலும் 157 முறைப்பாடுகள் கிடைத்ததாக குறிப்பிட்டார்.
ஆணைக்குழு சாட்சியமளிப்புக்காக 225 பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.
இதனடிப்படையில் 153 பேர் தமது சாட்சியங்களை வழங்கினர்.
இதனை தவிர 157 புதிய எழுத்துமூல முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்தன.
இந்தநிலையில் குறித்த 157 முறைப்பாடுகள் தொடர்பான நேரடி சாட்சியங்களுக்காக திகதி குறிக்கப்படும் என்று குணதாஸ கூறினார்.