பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2014


25 வயதான இளம் குடும்பஸ்தருடன் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த 41 வயதான இரு பிள்ளைகளுக்கு தாயான குடும்பப் பெண் தலைமறைவாகியுள்ளார்.
யாழ் கோ---- பகுதியைச் சோ்ந்தவரும் சுவிஸ்லாந்தில் நிரந்தரமாக குடும்பத்துடன் வாழ்பவருமான பெண் தனது தாயாருக்கு கடுமையான சுகவீனம் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து
கோ-----ல் தங்கியிருந்துள்ளார்.
குறிப்பிட்ட பெண்ணை கட்டுநாயக்காவில் இருந்து ஏற்றி வந்ததில் இருந்து வைத்தியசாலைக்கு பெண்ணின் தாயாரை ஏற்றி இறக்கியது வரை அனைத்துப் போக்குவரத்துக்கான உதவி செய்து வந்த அதே பகுதியைச் சோ்ந்த வாகனச் சாரதியுடன் குறித்த 41 வயதுப் பெண்மணிக்கு காதல் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
பெண்மணியின் தாயார் கடந்த சில நாட்களின் முன் மரணமடைந்தவுடன் வீட்டில் தனியே தங்கியிருந்த குறித்த பெண்மணியுடன் வாகனச் சாரதியான இளைஞனும் அவனது மனைவி மற்றும் அவா்களின் 2 வயதுக் குழந்தையும் தங்கியிருந்து்ள்ளனா். சாரதியின் மனைவிக்கு துாரத்துச் சொந்தமான குறித்த பெண்மணி  மீண்டும் வெளிநாடு செல்லும் விமான ரிக்கட் திகதி முடிந்தும் தங்கியிருந்துள்ளார்.
இதன் பின்னா் சாரதியின் மனைவி, தனது கணவன் மற்றும் பெண்மணிக்கு இடையில் தொடா்பிருப்பதாகச் சந்தேகித்து சண்டை பிடித்துள்ளார். இதன் பின்னா் கடந்த ஞாயிற்றுக் கிழமை பெண்மணியை சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் செல்வதாக கட்டுநாயக்காவுக்கு அழைத்துச் சென்ற கணவா் பின்னா் தனது வீட்டுக்கு வரவில்லை என சாரதியின் மனைவி அழுதவண்ணம் உள்ளார்.
இதே வேளை தான் சுவிஸ் நாட்டுக்குச் செல்லப் போவதாகவும் அங்கு சென்ற பின் உன்னை அங்கே கூப்பிடுவேன் எனவும் சாரதியான கணவா் தொலைபேசியில் தொடா்ந்து மனைவியுடன் கதைத்து வருவதாகத் தெரியவருகின்றது. தற்போது மனைவி பொலிசாரின் உதவியை நாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.