பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2014



குருநகரில் வீடு புகுந்து பெண்ணிடம் பாளிசல் முயற்சிக்கு முற்பட்ட இராணுவ வீரன் கட்டி வைக்கப்பட்டு  அடி 
குருநகர் தொடர்மாடிக்குடியிருப்புப் பகுதியினுள் புகுந்து தனித்திருந்த பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முற்பட்ட சிப்பாய் ஒருவர் பொதுமக்களால்
மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடையப்பட்டுள்ளார். மரம் ஒன்றில் இன்று காலை வரை கட்டி வைக்கப்பட்ட குறித்த சிப்பாய் இன்று காலை காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
பளை இயக்கச்சி படை முகாமை சேர்ந்த சிப்பாயான மு.சலிந்த (25 வயது) என்பவரே அகப்பட்டு தர்ம அடி வாங்கியுள்ளார். நேற்று புதன்கிழமை நள்ளிரவு குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றினுள்; அத்துமீறிப்புகுந்த  சிப்பாயே இவ்வாறு தர்ம அடி வாங்கியுள்ளார்.
அண்மையில் வடமராட்சி கிழக்கின் வெற்றிலைகேணியில் இதே போன்று கடற்படை சிப்பாய் ஒருவரும் இவ்வாறு அகப்பட்டு தர்ம அடி வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.