பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2014

இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா 
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
 
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி கப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. 
 
இந்திய அணி வீரர் அஸ்வின் 39 ரன்னுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் 228 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 
 
இதனால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.