பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2014

  நாமல் ராஜபக்ச சிபாரிசு செய்த பெண் ஒருவருக்கு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு . ஜனாதிபதி மகிந்தவிற்கு நோய் ஏற்பட பரபரப்பான காரணம்!- தந்தை - மகன் உறவில் விரிசல்?
 
இலங்கை ஜனாதிபதி கடந்த 22ம் திகதி திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் எம். டி என்டர்சன் புற்று நோய் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருக்கு இரத்தத்தில் சிறுநீர் கலந்து விட்டதாகவும் அது சம்பந்தமான சிகிச்சையே நடைபெற்று வருவதாகவும் தெரிகின்றது.
இவருடன் இவரின் சகோதரரான டட்லி ராஜபக்ச (அமெரிக்கப் பிரஜை) இருப்பதாகவும் இந்த வைத்தியசாலை அமெரிக்கா வூஸ்டன் பகுதியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நோய் இவருக்கு ஏற்பட காரணம் இவரின் மகன் நாமல் ராஜபக்ச சிபாரிசு செய்த பெண் ஒருவருக்கு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு செய்வதில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின் அதிக மது அருந்தியதன் விளைவாகவே இந்த நோய் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவம் இவரின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் சில காலங்களாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் தந்தை - மகன் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் தனது மகனது செயற்பாடுகளில் விருப்பமின்மையை வெளியிட்டு வருகிறார்.
இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி, நாமல் ராஜபக்சவை விமர்சிப்பதாகவும் இதனால் ஆத்திரமடையும் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதியை சாடி விட்டு அங்கிருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.
நாமல் ராஜபக்ச, ஜனாதிபதியை எதிர்த்து பேசுவது குறித்து ஜனாதிபதியின் பாரியார், நாமலை கண்டித்த போதிலும் அதனை அவர் பொருட்படுத்துவதில்லை.
கடந்த வியாழக்கிமை முற்பகல் 11.20 அளவில் ஜனாதிபதிக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதுடன் அவர் அம்புலன்ஸ் வண்டியில் அலரி மாளிகையில் இருந்து சிகிச்சைக்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிகிச்சையின் பின் மீண்டும் ஜனாதிபதி அலரி மாளிகைக்கு திரும்பியுள்ளார். அன்றைய தினம் இரவு ஜனாதிபதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்ற நாமல் ராஜபக்சவிடம் அவரது செயல்களை ஜனாதிபதி கண்டித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் பரிந்துரை கடிதம் ஒன்றினை அடுத்து ருகுணு பல்கலைக்கழகத்திற்கு மாணவி ஒருவர் சேர்க்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி, அவரை கண்டித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாகியமை குறித்து ஜனாதிபதி, நாமல் ராஜபக்சவை கடுமையாக சாடியுள்ளார். இதன் போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஜனாதிபதி மீண்டும் சுகவீனமுற்றுள்ளார். இந்த நிலைமை காரணமாகவே அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற சென்றதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா சென்ற ஜனாதிபதிக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.
சத்திர சிகிச்சையின் பின்னர், குறைந்தது மூன்று மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
எனினும் மூன்று மாதங்களுக்குள் முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ஜனாதிபதி சத்திர சிகிச்சையை நிராகரித்துள்ளதுடன் மாற்று சிகிச்சையை செய்ய தீர்மானித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் உடல் நிலை ஆபத்தானதாக இல்லை என்பதால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
சிகிச்சைகளின் பின்னர், நாளைய தினம் அமெரிக்காவில் இருந்து புறப்படும் ஜனாதிபதி, நாளை மறுதினம் இலங்கை வந்தடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.