பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2014


டகலசுக்கு போட்டியாக  கோத்தபாய குழு மண் அள்ளுகிறது 
யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு
குவிக்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இது வரை காலமும் டக்ளஸிற்கு சொந்தமான “மகேஸ்வரி பவுண்டேசன்” மட்டுமே மணல் அகழ்ந்து விற்பதில் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் நாள் தோறும் பல மில்லியன் ரூபா பணம் கைமாறி வந்திருந்தது.
அதை தொடர்ந்து கோத்தபாயவின் பினாமியான விண்ணன் என்பவர் களமிறங்கியிருந்த நிலையில் தற்போது இலண்டனில் இருந்து சென்று கோத்தாபயவிற்கு நெருக்கமான புள்ளி ஒருவரும் நெய்தல் எனும் பேரில் டக்ளஸிற்கு போட்டியாக மணல் அகழ்ந்து விற்பனை செய்துவருகிறார்.
வடமாகாணசபையினை பெயரளவில் கூட்டமைப்பு ஆளும் நிலையில் அது எதனையும் பொருட்படுத்தாது மணல் வியாபாரம் கொடிகட்டி பறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மணல் அகழும் பகுதியில் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்தவும் உள் மோதல்கள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தவும் அண்மையில் விசேட அதிரடிப்படை பாதுகாப்பினை பொறுப்பேற்றுள்ளது.
இதனிடையே இப்பகுதியில் சில நபர்கள் அனுமதியின்றி பாரவூர்தியில் மணல் அள்ளும் நடவடிக்கையில் திங்கட்கிழமை மாலை ஈடுபட்டதாகவும்;, அங்கு விசேட அதிரடிப் படையினர் சென்றிருந்த வேளை, மணல் அள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பாரவூர்தியை கைவிட்டுவிட்டுத் தப்பியோடியதாகவும் இதனையடுத்து, பாரவூர்தியை கைப்பற்றிய விசேட அதிரடிப் படையினர், அதனை பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.