பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2014


காணாமல் போனோரை தேடி போராட்டம்! கூட்டமைப்பு முழுமையான ஆதரவாம்!

காணமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியாவில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பொதுக்கூட்டத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு
முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
பிரiஐகள் குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல்
போன உறவுகளைக் கண்டு பிடித்துத்தரக் கோரி வவுனியாவில் பொதுக் கூட்டமும் பேரணியும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சில தினங்களிற்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் போனோர் தினமான 30 ஆம் திகதி வடக்கின் வவுனியா முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து வவுனியாவில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்பவற்றை நடத்தவுள்ளனர்.
வவுனியா மற்றும் மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பிரiஐகள் குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப்பேரணி வவுனியா பஸ் நிலையத்திலிருந்து வவுனியா நகர சபை வரை பேரணியாகச் சென்றும் அதனைத் தொடர்ந்து மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
சர்வதேச காணாமல் போனோர் தினத்தில் வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உறவுகளை மீட்டுத் தரக் கோரி நடாத்துகின்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான அதரவை வழங்குவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.