பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2014

மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு போலீசார் வழக்கு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது, மதுரை நிலஅபகரிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரி முத்து மாணிக்கம் என்பவர் மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள நிலஅபகரிப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்த புகாரின்பேரில், இன்று (புதன்கிழமை) மு.க.அழகிரி மீது தயா பொறியியல் கல்லூரிக்கு நிலம் ஆக்கிரமித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயா பொறியியல் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை அனுமதியை தமிழக அரசு கொடுக்காத நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு சென்று மாணவர் சேர்க்கை அனுமதி பெற்றதாலும், திமுகவில் மறுபடியும் மு.க.அழகிரி இணையும் சூழ்நிலை உருவாகக் கூடும் என்ற தகவல் கிடைத்ததும் ஆளும் கட்சி இந்த வழக்கை தற்போது போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.