பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2014

சில்க் ஸ்மிதாவுடன் நடனமாடும் ராஜபக்சே: அதிமுகவினர் அதிரடி
ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட இலங்கையை கண்டிக்கும் வகையில் மேலும் ஒரு பேனர் ஒட்டப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில், ராஜபக்சே கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் அருகே நிற்பது போல் உள்ள ஒட்டப்பட்டுள்ள பேனரில், சிங்கள அகதிகளின் நலவாழ்வுக்கு அதிபர் ராஜபக்சேவின் மாபெரும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி என எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வாழ் சிங்களர்கள் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதன் பதிவு எண் 420 எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
இந்த ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட் அனைத்து இலங்கைத் தூதரகங்களிலும் கிடைக்கும் என இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கலை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 30ம் திகதி பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், விளம்பர உதவி, அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம், பாளை பகுதி எனவும் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.