பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2014

ஜி.சிவா பெப்சி தலைவரானார்

திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓட்டு போட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அதில் சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜி.சிவா, செயலாளர் பதவிக்கு கே.ஆர்.செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாளராக சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.