பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2014

பட்ஜெட் பற்றி படிப்பிக்க வடக்கிற்கு அதிகாரிகள் வருகை 
வடக்கு மாகாணசபையின் 2015 - 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் முறைமை தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொது நூலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
 
மத்திய நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவினால் வடமாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள்,  அதிகாரிகளிற்கு வரவு செலவுத்திட்டம் தயாரிப்பது தொடர்பில் விளக்கம் அளிக்கப்படுகின்றது.
 
வரவு செலவுத்திட்டத்தில் வடமாகணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் மற்றும் முதலீடுகள் தொடர்பிலும், எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது தொடர்பிலும் நிதியமைச்சின் செயலாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.