பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2014

காஸ்மீரில் வெள்ளம்:உயிரிழப்பு 340ஆக அதிகரிப்பு 
 காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரதேசங்களில் ஐந்து நாட்களாக நீடித்து வரும் தொடர் அடை மழையால் இதுவரையில் 340 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 
வரலாறு காணாதவாறு ஐந்து தசாப்தங்களை கடந்து இம்முறை பெய்து வரும் அடைமழையில் பாகிஸ்தானிகள் 160 பேரூம்,காஷ்மீரில் 175இற்கு அதிகமானவர்களும் உயிரிழந்துள்ளனர்.
 
ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை இழந்த நிலையில் நிர்க்கதியாகியுள்ளதாகவும் ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலமே உயரிழந்தவர்களை மீட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.