பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2014

புத்தூரில் தனியார் பேருந்து தடம்புரள்வு : இளைஞன் சாவு 
புத்தூரிலிருந்து கொழும்பு நோக்கி வழித்தட அனுமதி இன்றி சென்று கொண்டிருந்த  தனியார் பேருந்து பிரவாணி சந்தியில் இன்று இரவு 7.50 மணியளவில் தடம்புரண்டது.இதனால் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
 
இந்த விபத்தில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 24வயதுடைய எம்.சதீஸ் என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
 
மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் புத்தூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.