பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2014

சபர்மதி ஆசிரமத்திற்கு கதர் உடை அணிந்து சென்ற சீன அதிபர்

சீன அதிபர் ஜி ஜிங்பிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 

அப்போது பிரதமர் மோடி வழங்கிய வெள்ளை நிற கதர் ஆடையுடன் சீன அதிபர் ஆசிரமத்தை பார்வையிட்டார். அங்கு மோடியுடன் சில மணித்துளிகளை செலவு செய்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ராட்டையை சுழற்றினார். 

பிறகு, சீன அதிபர் மற்றும் அந்நாட்டின் முதல் குடிமகள் லி யுவான் இருவரும் பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆற்றங்கரையை பார்வையிட்டனர். அங்கு குஜராத் கலாச்சார நடன நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். 

இரண்டு தலைவர்களும் சிறிது நேரம் இந்திய பாரம்பரிய கட்டிலான ஜூலாவில் அமர்ந்திருந்தனர். பிறகு, சபர்மதி ஆற்றங்கரையில் இரவு விருந்தை ஏற்றுக்கொண்டனர்