பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2014

ஐ.நா. இலங்கைக்கு புதிய குழுவை அனுப்ப உத்தேசம்
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, ஐ.நா. புதிய குழுவொன்றை அனுப்பி வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார பிரிவின் கீழ் இந்த குழு நியமனம் செய்யப்படவுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் உள்நாட்டு விசாரணைகள் உள்ளிட்ட பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட செய்தி ஊடகமான இன்னர் சிட்டி பிரஸ் செய்தியை வெளியிட்டிருக்கிறது.