பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2014


பருத்தித்துறை முனையில் இனங்காணப்படாத சடலம்
பருத்தித்துறை முனைப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என இனங்காணப்படவில்லை. இருப்பினும் இந்திய மீனவர்கள் மூவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என இந்திய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது. அதனையடுத்து இந்திய மீனவர்களது சடலமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நேற்று முன்தினம் மண்கும்பான் கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.