பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2014


எம்மை மீறி எவருமே இல்லை இதுவே இராணுவத்தினர் விடுக்கும் செய்தி
"எவரும் எங்களை மீறியவர்கள் அல்லர் என்பது
தான் இராணுவத்தினர் சொல்லும் செய்தியாகவுள்ளது. அதனால்தான் எமது மக்களின் பாதுகாப்புக் குறித்து நான் கருத்துக்களைத் தெரிவித்தேன். எனது பாதுகாப்பு பற்றி எதையும் நான் சொல்லவில்லை இவ்வாறு தெரிவித் துள்ளார் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். "தன்னை ஒளிப்படம் எடுக்கின்றார்கள் என்று முதலமைச்சர் கூறுகின்றார். ஆனால் அது தொடர்பில் பாதுகாப்பு பிரச்சினை இருந்தால் ஏன் பொலிஸில் முறைஆ;பாடு செய்யவில்லை'' என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கேள்வி ஸழுப்பியிருந்தார். இது தொடர் பில் முதலமைச்சரிடம் "உதயன்' வினவியது. அதற்குப் பதில ளிக்கையிலேயே மேற்கண்ட வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார். "எனது பாதுகாப்பு குறித்து நான் முறைப்பாடு செய்ய வில்லை. மக்களின் பாதுகாப் புக் குறித்தே முறைப்பாடு செய்திருந்தேன். பொது நிகழ்வுகளில், இராணுவத்தினர் சுற்றி வளைத்து ஒளிப்படங்களை ஏன் எடுக்கின்றார்கள் என்று தான் கேட்டிருந்தேன். அது எங்களுடைய மக்களின் மனங்களில் பயத்தை ஏற்படுத்துவதற்காக அவ்வாறு செய்கின்றார்கள். இன்றுள்ள தொழில்நுட்பம், கண்டுபிடிப்புக்களைக் கொண்டு யார் வேண்டுமானாலும் என்னை எவ்வளவு ஒளிப்படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். அத்தோடு எனது உடல் மொழிகளையும் மதிப்பீடு செய்து கொள்ளலாம். ஆனால் யார் படம் எடுக்கின்றார்கள் ? அந்தப் படங்கள் ஏன் முக்கியமானவை ? யாருக்கு அவை முக்கியமானவை என்பதை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். பின்தங்கிய கிராம மக்கள் கடந்த காலங்களில் வெளியில் சொல்ல முடியாத துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். "எவரும் எங்களை மீறிய வர்கள் அல்லர்' என்பதே இராணுவத்தினர் அவர்களுக்குச் சொல்லும் செய்தியாக உள்ளது. இந்த விடயத்தை பொலிஸாரிடம் முறையிட வேண்டிய அமிசியம் கிடையாது. இது இராணுவத்தினருக்கு அவர்களது நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சொல்லப்படும் அரசியல் முறைப்பாடு'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.