பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2014

முத்திரை வரி 75 லட்சம் 
 வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான முத்திரை வரி 75 லட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

 
திறைசேரியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த பணத்தை சபையின் அபிவிருத்தி வேலைகளுக்கு பயன்படுத்துவதென்று ஏற்கனவே வரவுசெலவுத்திட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி சங்கானைப் பிரதேசத்தில் பொது நூலகம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தவிசாளர்  மேலும் தெரிவித்துள்ளார்.
 
 வலி.மேற்குப் பிரதேச சபைக்குரிய முத்திரை வரி கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்காத நிலையில் பிரதேச அபிவிருத்தி பணிகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.