பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2014

கூட்டுப் பிரார்த்தனை கொட்டகையும் அச்சுறுத்தலால் அகற்றப்பட்டது 
மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக இன்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது. 


பிற்பகல் 3மணியளவில் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் நடாத்த ஏற்பாடு செய்திருந்த கூட்டுப்பிரார்த்தனைக்கு பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வு துறையினரும் இணைந்து குறித்த இடத்திற்கு வந்து கொட்டகைகள் மற்றும் ஏற்பாட்டு இடங்களை அகற்றுமாறும்  அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இன்றைய கூட்டுப்பிரார்த்தனையினை நிறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியதால் ஏற்பாட்டாளர்கள் பிரார்த்தனை கொட்டகைகளை அகற்றியதுடன் பிரார்த்தனையினையும் கைவிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில்  ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இன்று 2.30 மணிக்கு யாழ். பாடி விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.