பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2014


இயக்குநர் அட்லி - நடிகை பிரியா நிச்சயதார்த்தம்

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குனர் ஷங்கருடன் துணை இயக்குனராக பணியாற்றியவர். 

தற்போது அட்லி, சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் நடித்துவரும் பிரியாவை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரியா சின்னத்திரையில் அறிமுகமானவர். அதன்பிறகு சூர்யா-அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்துள்ளார். மேலும் கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’ படத்தில் கார்த்திக்கு தங்கையாக நடித்துள்ளார்.

தற்போது அட்லியும் பிரியாவும் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். திருமணம் தேதி பின்னர் அறிவிக்கப்ப டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.