பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2014

தமிழ் அமைப்புகளிடம் 'கத்தி' படம் குறித்து விளக்கம் அளிக்கவும் தயார் :  லைக்கா

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் காமன்வெல்த் மாநாட்டில் லைக்கா நிறுவன புகைப்படம் இடம்பெற்றிருப்பது போலியானது என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் லைக்கா நிறுவனத் தலைவர் சுபாஷ் கரண் விளக்கமளித்தார்.

 தமிழ் அமைப்புகள் சில சுய விளம்பரம் தேட 'கத்தி' படத்தை எதிர்க்கின்றன என்று அவர் கூறினார். தமிழ் அமைப்புகளிடம் 'கத்தி' படம் குறித்து விளக்கம் அளிக்கவும் தயார் என்று சுபாஷ் தெரிவித்தார். கத்தி படத்தை வேறு நிறுவனத்துக்கு விற்கும் திட்டம் இல்லை என்று அவர் உறுதியளித்தார்.