பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2014

திருச்சியில் இலங்கையர் கொலை : நால்வர் கைது 
தமிழகத்தின் திருச்சியில் இடம்பெற்ற இலங்கையர் கொலை வழக்கில் தனிப்படை பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

 
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (56). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகிலேயே கொலைசெய்யப்பட்டிருந்தார்.
 
இது குறித்து கன்டோன்மென்ட் பொலிஸ் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில் தனிப்படை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
 
ஆரம்பக்கட்ட விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த அதே பகுதியில் வசித்துவரும் ராகவன் என்பவருக்கு கொலையில் தொடர்பிருந்தது தெரியவந்தது. 
 
இதனையடுத்து அவரை  தேடிவந்த பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ராகவன், அவரது உறவினர் குமரன், இமாம்அலி, கல்லுக்குழியைச் சேர்ந்த ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.