பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2014

கூட்டமைப்பை சந்திக்கிறார் யசூசி அகாசி 
 24 ஆவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.


இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரி மகஜர் ஒன்று கையளிக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.