பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2014

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி பணப்பட்டுவாடா: தேர்தலை நிறுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்கிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ஞாயிற்றக்கிழமை கோவை சென்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்கிறார்கள். முறைகேடுகள் அதிகம் நடப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயகத்திற்கு வாக்களிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு, பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும். காலையில் கோவையின் நகர் பகுதிகளில் ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்திருப்பதை பாஜகவினர் தடுத்துள்ளனர். மக்களும் தடுத்துள்ளனர். பணப்பட்டுவாடா செய்திருப்பதை வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்றார்