பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2014


ஒட்டுசுட்டானில் மினிசூறாவளி
ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்றுமுன்தினம் பிற்பகல் வீசிய பலத்த காற்றுடன்
கூடிய மழையினால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மினிசூறாவளியினால் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள கெருடமடு மற்றும் மண்ணாங்கண்டல் கிராமங்களை சேர்ந்த மக்களினதும், புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வசந்தபுரம் கிராம மக்களினதும் 42 வீடுகள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்றுக்கு கூரைகள் மற்றும் கூரைத்தடிகள் தூக்கி வீசப்பட்டமையினாலும், மரங்கள் முறிந்து கூரைகளின் மீது வீழ்ந்தiமயாலும் 10 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் மட்டுமன்றி வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு வீட்டு கட்டுமானத்துக்கு அரிந்த சீமெந்து கற்களும் மழை நீரில் கரைந்து போயுள்ளன. நேற்று காலை அப்பகுதிகளுக்கு சென்று அனர்த்த நிலைமைகளை பார்வையிட்டுள்ள கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் பிரதேசசெயலர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக முடிந்தவரையான உதவிகளை செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.