பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2014

மாவை எம்.பி.க்கு அமைச்சர் டளஸ் ஆலோசனை 
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக நியமனம் பெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆளும் கட்சி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் நிலவும் பிரிவினை மற்றும் கருத்துமுரண்பாடுகளை கலைந்து தலைமைத்துவத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
 
மேலும்இ அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை தொடர்பாக சர்வதேசத்தின் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொண்டு செல்லும் கருத்துக்கள் குறித்தும் அமைச்சர் டளஸ் ஆலோசனை விடுத்துள்ளார்.