பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2014

ஜனாதிபதி தேர்தல்! வர்த்தமானி அறிவித்தல் இன்று நண்பகல் வெளியாகும்! மைத்திரிபால தலைமையில் பிரசாரக்குழு
ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான ஏகமனதான ஒப்புதலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நேற்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளது.
இதனையடுத்து, இன்று பகல் 12 மணியளவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்;;டம் இடம்பெற்றது.
இதன் போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து தொகுதி அமைப்பாளர்களின் நியமனங்கள் குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி கட்சி மாறுவார் என்று கூறப்பட்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.