பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2014

 பிரதமர் பதவி! திரும்பியும் பார்க்காத மைத்திரிபால- ஜனாதிபதி கையெழுத்திட்டார்: மைத்திரிபால வெளியேறுகின்றார்?
அமைச்சர் மைத்திரபால சிரிசேனவுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து பிரதமர் பதவி வழகங்ப்பட்ட நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.
நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய செயற்குழு கூட்டத்தின் இடைநடுவில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் அதனை மறுத்து, தனக்கு பிரதமர் பதவியில் நாட்டமில்லை என்று முகத்திலடித்தாற் போன்று பதிலளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஜனாதிபதி தரப்பினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.