பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2014

பரபரப்பாகிறது தேர்தல் களம் சஜித், சம்பிக்க, கம்மன்பில ஜனாதிபதி மகிந்தவுடன் சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அரசிலிருந்து விலகிய ஜாதிக யஹல உறுமய மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் பொது எதிரணிக்கு ஆதரவாக செயற்பட்ட நிலையில் கொழும்பு அரசியலில் புதிய திருப்பமாக அரசில் இருந்து விலகிய யஹல உறுமயவின் தலைவரான முன்னாள் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை பிரதான எதிர்க்கட்சியும் பொது எதிரணியின் பிரதான கட்சியுமான ஐ.தே.கவின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி மகிந்தவுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளமை கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை எதிர்க்கட்சியான ஐ.தே.க வின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ அண்மைகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் ஜனாதிபதியுடன் பொது இடங்களில் தோன்றி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்.

எதிரணித் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றுள்ளது.

டிரான் அலசின் தந்தையும், கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் நிறுவனருமான ரிட் அலசின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்விலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசியலில் ஆளும்கட்சிக்கும், எதிரணிக்கும் இடையே அரசியல் பேரங் களை நடத்துவதில் டிரான் அலஸ் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.