பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2014

ஹியூக்ஸூக்கு சச்சின் அஞ்சலி
தனது பட் மூலம் பிலிப் ஹியூசுக்கு, சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணி வீரர் பிலிப் ஹியூக்ஸ், உள்ர் தொடரில் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி ‘ஜாம்பவான்’ சச்சின், ஹியூக்ஸ் 25 வயதில் மரணம் அடைந்ததை நினைவுபடுத்தும் வகையில், தனது 25 வயதில் விளையாடிய பட் மீது தொப்பியை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்த படத்தை சச்சின், தனது ‘டுவிட்டர்’ இணையத் தளத் தில் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியில், எனது 25 ஆவது வயதில் விளையாடிய பட் இது, ஹியூக்ஸ் ஆன்மா சாந்தி யடையட்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல வெஸ்ட் இண்டீஸ் ‘ஜாம்பவான்’ விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள், தென் ஆபிரிக்காவின் டுபிளசி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்
.