பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2014

பொதுவேட்பாளர் புரிந்துணர்வு உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் தொடர்பிலான உடன்பாடு தொடர்பில் எதிர்க்கட்சிகள் நாளை திங்கட்கிழமையன்று செய்து கொள்ளவிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
பொதுவேட்பாளர் நிலைக்கு வித்திட்ட பௌத்த பிக்குவான மாதுளுவேவ சோபித தேரர் தொடர்ந்தும் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்தே இந்த உடன்பாடு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு, மாதுளுவேவ சோபித, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உட்பட்ட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர்.