பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2014

இரகசிய பேச்சுவார்த்தைகள் வேண்டாம்!– தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரகசியமான பேச்சுவார்த்தைகளோ, நிபந்தனைகளோ அவசியமில்லை என கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கொள்கைகளையும் நிபந்தனைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் பின்னர் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க முடியும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருந்தது.
கூட்டமைப்பு தனது நிபந்தனைகள் குறித்து நேரடியாக தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆளும் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்துள்ளன.