பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2014

இலங்கையிலேயே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு இரண்டாம் இடம் 
மத்திய சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய தாய்,சேய் நல மேன்மை விருதுக்கான போட்டியில்
தேசிய ரீதியில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளது.
 
 
இப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகொட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மூன்றாம் இடத்தினை குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பொல்காவல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் பெற்றுக்கொண்டன. 
 
இவர்களுக்கான தேசிய விருது வழங்கும் வைபவம் நேற்று முடன்தினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
இவ் விழாவில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக்கலாநிதி ஜெயசீலன் மற்றும் மேலதிக சுகாதார 
வைத்திய அதிகாரி வைத்தியக்கலாநிதி சுரணுகா ஆகியோரும் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இவ் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
 
வடமாகாணத்தில் முதலாம் இடத்தினை கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும்,இரண்டாம் இடத்தினை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மூன்றாம் இடத்தினை சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் பெற்றுக்கொண்டன.