பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2014


புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் சாவு 
 கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில்  நேற்று மாலை
இடம்பெற்றுள்ளது.
 
சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது- 09) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். 
 
நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், நீர் அருந்துவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோது தவறி வீழ்ந்துள்ளான் என்றும், சிறுவனை நீண்டநேரமாகக் காணாத உறவினர்கள், தேடியபோது சிறுவன் நீரில் மூழ்கியமை தெரியவந்தது என்றும், 
 
 
இது குறித்து தமக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். 
-