பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2014

கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் -கடலோரப்பகுதிகளில்  இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
 பருத்தித்துறை திக்கம் பகுதி கடற்கரை வீதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை
காரணமாக தற்போது உடைப்பெடுத்துள்ளன.
கடற்கரை அணைக்கட்டுக்கள் உடைந்ததன் காரணமாக அப்பகுதி போக்குவரத்துக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 
அத்துடன் கடல் நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் உட்செல்வதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடலோரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை 
 நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 
 
 
குறிப்பாக புத்தளம் திருகோணமலை காங்கேசன்துறை வரையான கடலோரங்களில் இடி காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவம் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 
 
அத்துடன் பெரும்பாலான கடலோரங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவும். வடமேற்கு கரையோரமாக மழைக்கான சாத்தியம் நிலவுவதாகவும் காற்றின் வேகம் மணிக்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
வடக்கு தெற்கு வான்நிலைகளில் நிலவிவரும் முகில்கூட்டங்களால் தீடீரென காற்று வீசக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாகவும் காற்றின் வேகம் 70 கிலோமீற்றர் வேகத்துக்கு அதிகரிக்ககூடுமெனவும் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.