பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2014

யாழிற்கு புதிய இந்திய தூதுவர் 
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு புதிய துணைத்தூதுவராக நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

 
இந்தியாவின் துணைத்தூதராக பதவி வகித்த மகாலிங்கம் இவ்வருட ஆரம்பத்தில் கஜனாவுக்கு தூதுவராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளார். இதனையடுத்து கண்டியில் இந்திய துணைத்தூதராக கடமையாற்றி வந்த நடராஜ் யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத்தூதராக கடமையாற்றவுள்ளார்.
 
எதிர்வரும் மாதம் தனது பதவிளை ஏற்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டியில் உள்ள துணைத்தூதருக்கு நேபாளத்தில் இருந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது