பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2014

அப்பாவை காணவில்லை அம்மா வெளிநாட்டுக்கு 13 வயது மகன் சாட்சியம்
செட்டிகுளம், மெனிக்பாம் பகுதி யில் உள்ள எமது வீட்டின் கதவை கோடரியால் கொத்தித் திறந்த இராணுவம் அப்பாவை பிடித்துச் சென்றது என 13 வயது மகன் ஜனாதி பதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். 

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக நேற்று இடம் பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே குணராசா டிலக்சன் என்ற 13 வயது சிறுவன் இவ் வாறு சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், எனக்கு அப்ப 7 வயது. 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு 8 மணியளவில் எமது வீட்டுக்கு வந்த இராணுவம் கதவைத் தட்டியது. நாங்கள் திறக்கவில்லை.

கோடரியால் கதவை கொத்தி அப்பாவை பிடித்துச் சென்றனர்.  அம்மா போய் மறிக்க மறிக்க எங்கள விட்டுட்டு ட்ரக் ஒன்றில அப்பாவை ஏத்தி கொண்டு போட்டாங்க.

ஆமி உடுப்புடன் தான் வந்து கொண்டு போனாங்க. இதற்கு முதல் ஒருக்கா எங்கட அப்பாவை ஆண்டியாபுளியங்குளம் இரா ணுவம் சுற்றிவளைத்து சந்தேகத்தில் பிடித்து சென்றவங்க.

பிறகு பிணையில் விட்டு அப்பா காம்பில போய் அடிக்கடி சைன் வைக்கிறவர். அப்படி செய்த நிலையிலேயே பிறகு என்ர அப்பாவா கொண்டு போட்டாங்க.

அம்மாவும் வெளி நாட்டுக்கு வேலைக்கு போட்டா. நானும் தங்கையும் தான் உறவினர்களுடன் இருக்கிறோம் என்றார்.

குறித்த சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் சாட்சியமளிக்க வந்தமை குறிப்பிடத்தக்கது.     
வாறு சாட்சியமளித்தார்.