பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணிக்குத்தான் ஆதரவு! அரசாங்கம் கூறுகிறது
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அரசு அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக்கு எதிராக யார் போட்டியிடுகின்றார்களோ அவருக்கு ஆதரவாக கூட்டமைப்பு செயற்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சர்வதேச சக்திகளின் சூத்திரத்துக்கு ஏற்ப செயற்படுகின்றார் என்பது அவர் ஆற்றியுள்ள உரையிலிருந்து தெளிவாகின்றது.

இது பாரதூரமான கூற்றாகும். உக்ரேனில் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியை ஒரு வருடம் கூட செயற்பட இடமளிக்கவில்லை என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு எமது ஆளும் கூட்டணி கடுமையாக உழைக்க ஆரம்பித்துள்ளது.

கிராம மட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் ஆளும் கட்சியினர் பரப்பு ரைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் பொது எதிரணியின் தேர்தல் பரப்புரைக் கட்டமைப்பு எங்கே? பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பரப்புரை செயற்பாடுகள் எங்கே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரத் பொன்சேகாவுடன் இருந்த ஜயந்த கெட்ட கொடவும் எமது பக்கம் வந்துவிட்டார்.

வெறுமனே சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புவதையே இன்று எதிரணி பிரதான பரப்புரை ஆயுதமாக கொண்டுள்ளது. 

ஆனால் அதற்கு ஆயுள் மிகவும் குறைவாகும். எதிரணி முக்கியஸ்தர்கள் தமது இயலாமையை மறைக்க முயற்சிக்கின்றனர்.

சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் ரணில் ஆகியோரின் யுகங்கள் தற்போதைய இளம் சந்ததியினருக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளா
ர்.