பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2014


மின் கட்டணத்தில் 15 சதவீதம் உயர்வு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
மின் கட்டணம் வெள்ளிக்கிழமை முதல் 15 சதவிகிதம் உயர்த்தப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனைகளை மற்றும் ஆட்சேபனைகளை அறிய கூட்டம் நடத்தப்பட்டது. மின்சார ஒழுங்கு முறை ஆலோசனைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் மின் நுகர்வோருக்கு 15 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மின் கட்டண உயர்வால், ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

உயர்த்தப்பட்டுள்ள 15 சதவிகித மின் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு தமிழக அரசே கூடுதல் மானியமாக அளிக்கும் என்று கூறியுள்ளார். 



உயர்த்தப்பட்ட மின் கட்டண விபரம்

முதல் 100 யூனிட் வரையிலான மின் கட்டண உயர்வு ரூ.2.60ல் இருந்து ரூ.3ஆக உயர்ந்துள்ளது. 

100 யூனிட் முதல் 200 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.80ல் இருந்து ரூ.3.25ஆக உயர்ந்துள்ளது. 

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.4ல் இருந்து ரூ.4.60 ஆக உயர்ந்துள்ளது.

501 யூனிட் முதல் அதற்கு மேல் யூனிட் வரையில் ரூ.5.75ல் இருந்து ரூ.6.60ஆக உயர்ந்துள்ளது.