பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2014

பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் தலைவர்கள் முக்கிய சந்திப்பு
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் தலைவர்கள் இன்று முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார முன்னெடுப்புக்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் பிரசார உத்திகள் மற்றும் வன்முறைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின்போது சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன மற்றும் மங்கள சமரவீர உள்ளிட்டோர் பங்கேற்றனர்.