பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

16 அமைச்சர்களுக்கு இமெயில் மூலமாக மிரட்டல்: மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு


ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள் 16 பேருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாம் சந்த் கட்டாரியா, தீவிரவாதிகளின் மிரட்டல் இமெயில் மூலம் வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 16 அமைச்சர்களையும் கொலை செய்வதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பது குறித்து, காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 16 அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் 16 அமைச்சர்களுக்கு இமெயில் மூலமாக கடந்த 22ஆம் தேதி இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரியில் இந்த மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இந்த இமெயில்களை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். 

அமைச்சர்களுக்கு வந்திருக்கும் மிரட்டலால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.