பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை அரசுக்கு தானமாக தந்த பெண்மணி




சர்வதேச முதியோர் தினவிழா வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள முதியோர் விடுதிகள் மற்றும் அனாதை விடுதிகளில் தங்கியுள்ள முதியோர்களை இந்த விழாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள் விடுதியை நடத்துபவர்கள்.
 
வேலூர் மாவட்டம், திமிறியை சேர்ந்தவர் 82 வயதான தாட்சாயிணி. இவரது கணவர் பாலு இறந்துவிட்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. தாட்சாயிணி முதியோர் இல்லம் ஒன்றில் வசிக்கிறார். இவரும் விழாவுக்கு வந்திருந்தார். தான் இறந்த பின் தனது வீட்டை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என உயில் எழுதி அதை மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலிடம் ஒப்படைத்தார்.
 
அதிகாரிகள் உட்பட அங்கிருந்த அனைவரும் இதனை கண்டு நெகிழ்ந்து போய்விட்டனர். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர்.
 
தற்போது அந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 50 லட்சம் என்பது குறிப்பிடதக்கது.