பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2014

2வது கட்ட தேர்தல்: காஷ்மீரில் 71 சதவீத ஓட்டுப்பதிவு: ஜார்கண்டில் 65 சதவீதம் பதிவானது
87 தொகுதிகளைக் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கும், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது 

இதில் முதல் கட்டமாக கடந்த 25–ந்தேதி ஓட்டுப் பதிவு நடந்தது. அப்போது காஷ்மீரில் 15 தொகுதிகளிலும், ஜார்கண்டில் 13 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2–வது கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில் காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும், ஜார்கண்டில் 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு நேற்று மாலை முடிவு அடைந்தபோது காஷ்மீரில் 71 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதுவும் காஷ்மீரில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் வரலாறு காணாத அளவில் நடந்த அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். முதல் கட்ட தேர்தலிலும் காஷ்மீரில் 71 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் 2–ம் கட்ட தேர்தல் நடந்த 20 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது. ஜார்கண்டில் தேர்தல் நடத்தப்பட்ட 20 சட்டசபை தொகுதிகளிலும் எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாக வாக்குப்பதிவு நடந்ததாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.கே.ஜஜோரியா தெரிவித்தார்.

மொத்தம் 64.49 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜார்கண்டில் முதல் கட்ட தேர்தலின்போது 62 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.