பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2014

விமானத்தை கடத்த நினைத்தால் மரண தண்டனை: புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விமான கடத்திலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த புதிய சட்டத்தின்படி விமான கடத்தல் முயற்சியில் ஈடுபடுபவரால் பாதுகாவலர் அல்லது பிணைக் கைதி ஒருவர் உயிரிழந்தாலும், கடத்த முயன்ற நபருக்கு மரண தண்டனை விதிப்பதுடன், அவரது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய இந்த புதிய சட்டத்திருத்த மசோதா வகை செய்கிறது. 

புதிய சட்டத்திருத்தத்தை அமல்செய்ய முந்தைய 2010ம் ஆண்டு அறிமுகம் செய்த சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.