பக்கங்கள்

பக்கங்கள்

24 டிச., 2014

ஹக்கீமின் வீட்டில் பசில் ராஜபக்ஸ…

ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் 22-12-2014 இரவு 9.45 மணியளவில் அதிரடியாக உட்புகுந்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீமுடன், ஜனாதிபதி
மஹிந்த ரராஜபக்ஸ முக்கிய பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் பசில் ராஜபக்ஸவுடன், ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பதற்காக உடனடியாக தனது வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
தற்போது அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து கிடைக்கப்பெற்ற  மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறியவருகிறது.