பக்கங்கள்

பக்கங்கள்

24 டிச., 2014

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்; சாமியாருக்கு எதிரான மனுவில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது சிபிஐ விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம். இவர் மீது இவரது முன்னாள் சீடர் சவுகான், பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை சாமியார் செய்ததாகவும், தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சவுகான் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கண்ணன், ஆண்மை நீக்கம் செய்ய சம்மந்தப்பட்டவர்கள் சம்மதம் கொடுத்திருந்தாலும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றார். இந்த மனு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.