பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2014

அரவிந்த ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் அவரது தாய் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 

தந்தை உட்பட 3 பெண்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்பிழைத்த சகோதரிகள் இருவர், தாங்கள் தற்கொலைக்கு முயன்றபோது தங்களை சிலர் பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார் விழுப்புரம் மாவட்டம் பிள்ளைசாவடியை சேர்ந்த விஜயகுமார், ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.