பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2014

பாகிஸ்தானில் மேலும் 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் புகுந்து சுட்டதில் 132 குழந்தைகள் உள்பட மொத்தம் 148 பேர் பலியானார்கள். இதன் பிறகு தீவிரவாதிகளை ஒழிப்பதில் அந்த நாட்டு அரசு தீவிரம் காட்டி உள்ளது.

ஏற்கனவே மரணதண்டனை விதிக்கப்பட்ட 2 முன்னாள் ராணுவத்தினர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவசரமாக தூக்கில் போடப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து இன்று சுபைர் அகமது, ரஷீது குரேஷி, குலாம் சர்வார் மற்றும் ரஷியாவை சேர்ந்த அக்லாகி அகமது ஆகிய 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களில் ஒருவன், 2003&ம் ஆண்டு, முன்னாள் அதிபர் முஷரப்பை கொல்ல முயன்றவன் ஆவான்.

 மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களை, பைசலாபாத் சிறைச்சாலைக்கு மாற்றி தூக்கு தண்டனையை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றியது.